பழநியில் மாத கார்த்திகை வழிபாடு
ADDED :1074 days ago
பழநி: பழநியில் மாத கார்த்திகையை முன்னிட்டு நேற்று மலைக்கோயிலில் விளக்கு பூஜை நடந்தது. பழநி மலைக்கோயிலில் வைகாசி மாத கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. திருவிளக்கு பூஜை மலைக்கோயிலில் நடைபெற்றது. தங்கமயில் வாகனத்தில் சின்ன குமாரசுவாமி புறப்பாடு நடைபெற்றது. அதன்பின் தங்கரத புறப்பாடு நடைபெற்றது. உள்ளூர், வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.