உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஷ்டாதச புஜ மகாலட்சுமி ஸ்ரீ துர்கா தேவி கோவிலில் சதா சண்டியாகம்

அஷ்டாதச புஜ மகாலட்சுமி ஸ்ரீ துர்கா தேவி கோவிலில் சதா சண்டியாகம்

மயிலாடுதுறை: கருவாழக்கரையில்  அஷ்டாதச புஜ மகாலட்சுமி ஸ்ரீ துர்கா தேவி ஆலயத்தில் நடைபெற்ற சதா சண்டியாகத்தில், திருவாவடுதுறை ஆதீனம் 24 உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியம், கருவாழக்கரையில்  ஸ்ரீ மகா சதாசிவ பீடம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் 18 கைகளில் ஆயுதம் ஏந்திய படி அஷ்ட தசபுஜ மகாலட்சுமி ஸ்ரீ துர்கா தேவி சன்னதியில் நவராத்திரியை முன்னிட்டு மகா சண்டியாகம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 51 கலசங்கள் வைக்கப்பட்டு, வசோர்த்தரா யாகம், செய்யப்பட்டு, அம்பாளுக்கு நவசக்தி அர்ச்சனை நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் பங்கேற்று பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !