உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வ விநாயகர் கோவிலில் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி

செல்வ விநாயகர் கோவிலில் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி

சின்னசேலம்: சின்னசேலத்தில் கடைவீதியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று காலை சக்தி அழைத்தலும், நவராத்திரி உற்சவமும் துவங்கியது.

சேலம் மெயின் ரோட்டில் உள்ள ஆர்ய வைசிய மஹால் உள்ளே உள்ள செல்வ விநாயகர் கோவிலில் இருந்து சக்தி அழைத்தல் நடந்தது. நிகழ்ச்சியில் இரண்டு வெள்ளிக் குடத்தில் சக்தி அழைத்து கோவில் குமார், முரளி சர்மா குருக்கள் சக்தி குடத்தை சுமந்து கடைவீதி வழியாக சன்னதி அடைந்தனர்.

தொடர்ந்து அம்மன் சிலைக்கு அபிஷேகத்துடன் நவராத்திரி 10 நாள் விழா துவங்கியது. நேற்று முதல் சுவாமிக்கு 10 நாட்களிலம் சிறப்பு அலங்காரம் செய்து, வழிபாடு நடத்தப்படும். இத்தகவலை நிர்வாக தலைவர் ரவீந்திரன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !