உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவராத்திரி விழாவை முன்னிட்டு காமாட்சியம்மன் கோவிலில் தரிசன நேரம் மாற்றம்

நவராத்திரி விழாவை முன்னிட்டு காமாட்சியம்மன் கோவிலில் தரிசன நேரம் மாற்றம்

காஞ்சிபுரம்: நவராத்திரி விழாவையொட்டி, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், வரும் 20ம் தேதி வரை காலை 11:15 மணி வரை மட்டுமே பக்தர்கள் அம்மனை தரிசிக்க அனுமதிக்கப்படுவர் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோவில், அம்மனின், 51 சக்தி பீடங்களில் காமகோடி பீடமாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு தினமும் ஆயிரகணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதில், வெள்ளி, செவ்வாய், பவுர்ணமி, அமாவாசை, பூரம் நட்சத்திரம், முகூர்த்தம், விடுமுறை நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது.

இக்கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நவராத்திரி விழா 13 நாட்கள் நடைபெறும். நடப்பாண்டு விழா, கடந்த 10ம் தேதி தொடங்கி, வரும் 22ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதையொட்டி, கோவிலில் நவாவர்ண பூஜை நடைபெறுவதால், வரும் 20ம் தேதி வரை காலை 11:15 மணிக்கு மேல் வரும் பக்தர்கள், மாலை 3:00 மணிக்கு அம்மனை தரிசிக்கலாம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !