உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊரப்பாக்கத்தில் ஆன்மிக சொற்பொழிவும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கோலாகலம்

ஊரப்பாக்கத்தில் ஆன்மிக சொற்பொழிவும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கோலாகலம்

ஊரப்பாக்கம்: நவராத்திரி விழாவையொட்டி, ஊரப்பாக்கத்தில் ஆன்மிக சொற்பொழிவும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நேற்று நடந்தது.

ஊரப்பாக்கம் பிரியா நகரில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட அரங்கில், நேற்று முன்தினம் நவராத்திரி விழா தொடங்கியது.

அக்., 20ம் தேதி வரை 10 நட்கள் நடைபெறும் இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில், தினமும் மாலை 5:30 மணிக்கு, பேராசிரியர் ரத்னமாலாவின் உள்ளத்தை வளமாக்கும் ஆன்மிக சொற்பொழிவு ஒரு மணி நேரம் நடைபெறுகிறது.

அதைத் தொடர்ந்து, தினமும் மாலை 6:45 மணிக்கு, தமிழகத்தின் முன்னணி கலைஞர்கள் பங்கேற்று நிகழ்த்தும் இயல், இசை, நாட்டிய நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.

மேலும், நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்தில், குழந்தைகளை மகிழ்விக்கும் பலவகையான பொழுது போக்கு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

இன்று மூன்றாவது நாள் நிகழ்ச்சியாக மாலை 5:30 மணிக்கு, ரத்னமாலாவின் ‘எது பக்தி?’ என்ற ஆன்மிக சொற்பொழிவும், அதை தொடர்ந்து, ‘ராக்கர்ஸ்’ குழுவினரின் பல்சுவை நடன, நாட்டிய, இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

தினமும் மாலை 7:00 மணி முதல், அறுசுவை உணவு, விருந்தோம்பல் உணர்வோடு பரிமாறப்படுகிறது.

நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் 5,000க்கும் மேற்பட்டோர் குடும்பத்தோடு பங்கேற்றனர். விழா அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுட்டீஸ்களுக்கான பொழுது போக்கு அம்சங்களை பெற்றோர்களும் கண்டு களித்து, ஆனந்தமடைந்தனர்.

ஊரப்பாக்கம் ஊராட்சி மக்கள், நந்திவரம் - ஊரப்பாக்கம் பிளாட்டினம் சிட்டி லயன்ஸ் கிளப், சங்கர பக்த ஜன சபா, வாசவி மற்றும் வனிதா கிளப் ஆகியோர் இணைந்து, இந் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !