வரதராஜப் பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா
ADDED :12 minutes ago
புதுச்சேரி: புதுச்சேரி வரதராஜப் பெருமாள் கோவிலில் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் 6ம் ஆண்டு நவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு பரதநாட்டியம் நிகழ்ச்சி நடந்து.
புதுச்சேரி விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் 6ம் ஆண்டு நவராத்திரி பெருவிழா, துர்கா பூஜை விழா காந்திவீதியில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவில் கடந்த 10ம் தேதி துவங்கி வரும் 21ம் தேதி வரை நடக்கிறது.
நேற்று தாராதேவி மூல மந்திர ஹோமம் நடந்தது. தொடர்ந்து மாணவர்களின் பரதநாட்டியம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பரதநாட்டியத்தில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.