உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் பகுதி முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ராமநாதபுரம் பகுதி முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ராமநாதபுரம் : ஆனி மாதம் பிறப்பு, கார்த்திகையை முன்னிட்டு ராமநாதபுரம் பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜை வழிபாடு, அன்னதானம் நடந்தது.

நேற்று ஆனி மாதம் பிறப்பு, கார்த்திகையை முன்னிட்டு, ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள வினைதீர்க்கும் வேலவர் கோயிலில் காலையில் பால், தயிர், சந்தனம், பழங்களால் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயில், வழிவிடு முருகன் கோயில், முகவை ஊரணி பாலசுப்பிரமணியசுவாமி கோயில், குமரய்யா கோயில், வெளிப்பட்டணம் பாலசுப்பிரமணியம் சுவாமி, பால தண்டயுதபாணி சுவாமி கோயில் மற்றும் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகம் நீச்சல் குளம் அருகேயுள்ள மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ள பாலமுருகனுக்கு அபிஷேகம் பூஜைகள் மற்றும் அன்னதானத்தில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !