ஆனி முதல் சோமவாரம்; ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :1162 days ago
கோவை; ராம் நகர் கோதண்டராமர் சுவாமி கோவிலில் உள்ள ஸ்ரீ ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரர் சன்னதியில் ஆனி மாத முதல் சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரர் சன்னதியில் உள்ள சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. புஷ்ப அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.