திருப்பரங்குன்றத்தில் ஆஷாட நவராத்திரி விழா துவக்கம்
ADDED :941 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோட்டை வராஹி அம்மன் வழிபாட்டு மன்றத்தில் ஆஷாட நவராத்திரி விழா நேற்று துவங்கியது. ஜூன் 27 வரை நடக்கும் இவ்விழாவில் தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், பூஜை முடிந்து பக்தர்கள் வராஹி மாலை பாடல்கள், அபிராமி அந்தாதி, லலிதா சஹஸ்ரநாமம் பாடுவர். பக்தர்களுக்கு தினம் ஒரு பிரசாதம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.