ரமணகிரி ஆசிரமத்தில் 103வது ஜெயந்தி விழா
ADDED :855 days ago
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி சிறுமலை அடிவாரத்தில் சுவாமி ரமணகிரி ஜீவசமாதி ஆசிரமம் உள்ளது. இங்கு சுவாமியின் 103வது ஜெயந்தி விழா நேற்று திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை, திருவெம்பாவை ஓதுதல் அபிஷேகத்துடன் நேற்று காலை 5:00 மணிக்கு துவங்கியது. அக்ஷர ரமணமாலை பாராயணம், மாணிக்கவாசகர் குருபூஜை முன்னிட்டு திருவாசக பாராயணம், சுப்ரமணிய மூல மந்திர ஹோமம் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் நடந்தன. யாக சாலை பூஜைகளை சோழவந்தான் பிரசாத் சர்மா குழுவினர் செய்தனர். நிகழ்ச்சிகளை கோயம்புத்தூர் ஏ.வி.எஸ்.,அசோசியேட்ஸ் சரவணகுமார் ஒருங்கிணைத்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சுவாமி ரமண பிரசாதனந்தகிரி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.