உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆற்றுார் கோவிலில் நமஸ்கார பூஜை ஆதிசங்கராச்சாரியாரின் சீடர் பங்கேற்பு

ஆற்றுார் கோவிலில் நமஸ்கார பூஜை ஆதிசங்கராச்சாரியாரின் சீடர் பங்கேற்பு

திருவட்டார்; ஆற்றூர் மஹாதேவர் கோவிலில் நடந்த நமஸ்கார பூஜையில் ஆதிசங்கராச்சாரியாரின் சீடரான நடுவில் மடம் புஷ்பாஞ்சலி சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

திருவட்டார் அருகே ஆற்றூர் கல்லுப்பாலம் மஹாதேவர் கோவிலில் கேரள ஆசாரப்படி ‘வைத்து நமஸ்காரம்’ எனப்படும் குருக்களை வணங்கும் நிகழ்வு நடந்தது. கோவில் தந்திரி மணிலிக்கரை மாத்தூர் மடம் சஜித் நாராயணரூ தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், ஆதிசங்கராச்சாரியாரின் வழி சீடரும், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி திருக்கோவிலின் புஷ்பாஞ்சலி சுவாமியுமான நடுவில்மடம் அச்சுதபாரதி சுவாமிகள் கலந்து கொண்டார். முன்னதாக கோவிலுக்கு வந்த புஷ்பாஞ்சலி சுவாமிகளுக்கு ஆலய தந்திரி சஜித் சங்கரநாராயணரூ பாதபூஜை செய்து வரவேற்றார். தலைமை அர்ச்சகர் விஜய கிருஷ்ணன் போற்றி பூர்ணகும்ப மரியாதை வழங்கினார். தொடர்ந்து மஹாதேவர் சன்னதியில் நேரடியாக பூஜைகள் மற்றும் புஷ்பாஞ்சலி செய்த சுவாமிகள் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். நிகழ்ச்சியில் , கொல்லூர் மூகாம்பிகை கோவில் முன்னாள் தலைமை அர்ச்சகர் ரவீந்திரநாதன் ஆதிக்கல் மற்றும் கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !