உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் சிறப்பு பூஜை

செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் சிறப்பு பூஜை

திருநெல்வேலி: செப்பறை கோயிலில் மாதாந்திர திருவாதிரை சிறப்பு பூஜை நடந்தது. நெல்லை அருகேயுள்ள ராஜவல்லிபுரம், செப்பறை அழகிய கூத்தர் கோயிலில், ஆனி உத்திர திருமஞ்சன திருவிழா, துவங்கி நடந்து வருகிறது. 4ம் நாளான நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. வரும் 24ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. இதனிடையே மாதாந்திர திருவாதிரை நட்சத்திரமான நேற்று, சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் மற்றும் அழகிய கூத்தருக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மதியம் அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !