பட்டானுார் ஜெகன்நாதர் கோவிலில் தேர் திருவிழா
ADDED :841 days ago
புதுச்சேரி : பட்டானுார் ஜெகன்நாதர் கோவில் தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஒடிசா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பூரி ஜெகன்நாதர் கோவிலை போன்று, புதுச்சேரி-திண்டிவனம் புறவழிச் சாலையில் பட்டானுாரில் ஜெகன்நாதர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலில் நேற்று தேர்திருவிழா நடந்தது. ஜெகன்நாதர், பலராமர், சுபத்ரா ஆகியோர் பலவண்ண துணிகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தேர்திருவிழாவில், உட்கல் சமாஜ் தலைவர் பரிஜா, பேராசிரியர் பெஹரா, சசிகாந்த தாஸ் மற்றும் கோவில் நிர்வாக குழுவினர் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.