உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் மகா ருத்ர யாகம்

நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் மகா ருத்ர யாகம்

நடுவீரப்பட்டு, : நடுவீரப்பட்டு கைலாச நாதர் கோவிலில் மகா ருத்ர யாகம் நடந்தது.

நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாச நாதர் மற்றும் முத்துமாரியம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டுமானம் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்து வருகிறது. கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் தடையின்றி சிறப்பாக நடந்தேற நேற்று கோவிலில் மகா ருத்ர யாகம் நடத்தப்பட்டது. சென்னை மோஹன் குருஜி தலைமையில் 12 சிவாச்சாரியார்கள் யாகவேள்விகளில் ஈடுபட்டு, வேத மந்திரங்கள் முழங்க மகாருத்ரயாகம் செய்தனர். அதையொட்டி, கைலாசநாதர் உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்துன. தொடர்ந்து, யாக வேல்வி யில் வைக்கப்பட்ட கலசங்கள் ஆலய உலாவாக வந்து சாமிகளுக்கு கலச அபிஷேகம் நடந்தது. 10:00 மணியளவில் தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் தலைமையிலான குழுவினர்கள் செய்திருந்தனர். ஆலய முன்னாள் அறங்காவலர் ராஜாமணி, கடலூர் கிரின்டெக் பள்ளி பொருளாளர் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !