கோவை ஐயப்ப சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED :886 days ago
கோவை ; மேட்டுப்பாளையம் ரோடு, ஸ்ரீ தர்ம சாஸ்தா சேவா சங்கம் மற்றும் ஐயப்ப சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று புதன் கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது. இதில் கும்ப கலசத்திற்கு நம்பூதிரிகள் கலச நீர் ஊற்றி சிறப்பு பூஜைகள் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்தனர்.