அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :947 days ago
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, மருதுபாண்டி நகர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கடந்த 13ம் தேதி கோலாகலமாக துவங்கியது. விழாவின் கடைசி நாளான இன்று முத்தாலம்மன் கோயிலில் இருந்து விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்து முக்கிய வீதியில் வழியாக ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். கோயில் எதிரே தீ குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாரானைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.