செங்கழுநீர் அம்மன் கோவில் திருவிழா ; பக்தர்கள் நேர்த்திக்கடன்
புதுச்சேரி : புதுச்சேரி சஞ்சீவி நகர் செங்கழுநீர் அம்மன் கோவில் செடல் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். புதுச்சேரி, உழவர்கரை நகராட்சி, சஞ்சீவி நகர் செங்கழுநீர் அம்மன், திரவுபதி அம்மன், கெங்கை அம்மன் கோவில்களில் நேற்று செடல் உற்சவம் நடந்தது. இதற்கான விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மதியம் கெங்கை அம்மனுக்கும், மாரியம்மனுக்கும் கூழ்வார்க்கப்பட்டது. மாலை செடல் உற்சவம் நடந்தது. இதில் பக்தர்கள் டிராக்டர், கார், மினி வேன்களை இழுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். வரும் 23ம் தேதி இரவு 8:00 மணிக்கு அர்ச்சுனன்-திரவுபதி திருக்கல்யாணம் நடக்கிறது. 24 மற்றும் 25ம் தேதிகளில் சிறப்பு பூஜை மற்றும் சுவாமி வீதியுலா நடக்கிறது. வரும் 26ம் தேதி மாலை 6:00 மணிக்கு தீமிதி உற்சவம் நடக்கிறது.