காளியம்மன் கோயில் விழா: கற்றாழையில் தொங்கிய உரல், உலக்கை, திருகு
ADDED :839 days ago
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே கட்டக்குளம் செல்வ விநாயகர், முத்தாலம்மன், காளியம்மன் கோயில் உற்ஸவ விழா நடந்தது. 14 ஆண்டுகளுக்குப் பின் 2019லும், மூன்று ஆண்டுகளுக்கு பின் நடந்த விழாவின் முதல்நாள் கிராம கோயில்களுக்கு பழம் படைத்தல், சிலை கரகம் எடுத்தல் தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு முதல் மரியாதை வழங்கப்பட்டது. இரண்டாம் நாள் மாவிளக்கு, முளைப்பாரி எடுத்தனர். காமாட்சி அம்மன் கோயில் முன் பண்டைய கால உபகரணங்களான ஆட்டு உரல், திருகு, உலக்கையை சோற்று கற்றாழையில் ஒட்டி மரத்தில் தொங்க விடப்பட்டதை பக்தர்கள் பார்த்து வழிபட்டனர். பொங்கல் வைத்து, கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர் நாளை (ஜூன் 22) அம்மன் பூஞ்சோலை அடைதல், கரகம், முளைப்பாரி கரைத்தல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.