உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இரும்பாடி முத்தாலம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

இரும்பாடி முத்தாலம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

சோழவந்தான்: சோழவந்தான் அருகே இரும்பாடி வைகையாறுக்கரையில் அமைந்துள்ள முத்தாலம்மன் கோயிலில் கடந்த ஜூன் 6ல் காப்பு கட்டுதலுடன் வைகாசி திருவிழா துவங்கியது. இதையடுத்து இன்று பூஜாரி ராமசாமி தலைமையில் அம்மனுக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து பெண்கள் உலக நன்மைக்காக 108 குத்துவிளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். நிர்வாக கமிட்டியினர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !