உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பராமரிப்பு பணிக்காக பழநி ரோப்கார் சேவை நாளை நிறுத்தம்

பராமரிப்பு பணிக்காக பழநி ரோப்கார் சேவை நாளை நிறுத்தம்

பழநி: பழநி முருகன் கோயில் சென்றுவர பயன்படும் ரோப் கார் சேவை நாளை (ஜூன் 23) பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட உள்ளது. பழநி முருகன் கோயில் சென்றுவர ரோப் கார், வின்ச், படிப்பதை, யானைப்பாதை உள்ளன. ரோப் கார் சேவையில் மூன்று நிமிடத்தில் மலைக்கோயில் செல்லலாம். மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை (ஜூன் 23) ரோப் கார் சேவை நிறுத்தப்பட உள்ளது. எனவே பக்தர்கள் மலைக்கோயில் செல்ல வின்ச், படி பாதை, யானைப்பாதை பயன்படுத்துமாறு கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !