உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளம் கவுமாரியம்மன் ஆனிப்பெருந்திருவிழா முகூர்த்தகால் ஊன்றப்பட்டது

பெரியகுளம் கவுமாரியம்மன் ஆனிப்பெருந்திருவிழா முகூர்த்தகால் ஊன்றப்பட்டது

பெரியகுளம்: கவுமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு முகூர்த்த முகூர்த்தக்கால் ஊன்றும் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனி பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று முகூர்த்தக்கால் ஊன்றும் விழாவில் செயல் அலுவலர் ராமதிலகம், பூஜாரி ராஜசேகர், மண்டகபடிதாரர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். முகூர்த்தக்காலிற்கு தீபாராதனை பூஜை நடந்தது. தேனி மாவட்டத்தில் பெரியகுளம் கவுமாரியம்மன் பிரசித்தி பெற்ற கோயிலாகும். ஆயிரம் கண்ணுடையாளாகவும், அம்மன் பக்தர்களுக்கு சகல ஐஸ்வர்யம் வழங்குவதால் தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமை உட்பட விடுமுறை ‌தினங்களில் வந்து செல்கின்றனர். திருவிழா காலங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும். ஜூலை 4 ல் சாட்டுதல், கம்பம் நடுதலை தொடர்ந்து ஜூலை 10 ல் கொடியேற்றத்துடன் 10 நாட்கள் திருவிழா துவங்குகிறது. தினமும் அம்மன் குதிரை, ரிஷபம், சிம்மம், அன்னபட்சி, யானை, மின் ஒளி, பூ பல்லாக்கில் உலா வருவார். முக்கிய திருவிழாவான ஜூலை 18 ல் மா விளக்கு உற்சவமும், மறுநாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்கினி சிட்டி எடுத்து அம்மனை வழிபடுவர் ஜூலை 25ல் மறுபூஜை பாலபிஷேகம் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !