பெரியகுளம் காளியம்மன் கோயில் ஆனித்திருவிழா கோலாகலம்
ADDED :937 days ago
பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை கீழரதவீதி காளியம்மன் கோயில் ஆனித் திருவிழா கோலாகலமாக நடந்தது. அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உட்பட 12 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இரு தினங்கள் நடந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கரகம் எடுத்தல், முளைப்பாரி, மாவிளக்கு, பொங்கல் வைத்தல், அக்னிசட்டி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை பூஜாரி கேசவன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.