புஷ்ப அலங்காரத்தில் இருக்கன்குடி மாரியம்மன் அருள்பாலிப்பு
ADDED :1205 days ago
கோவை : தாமஸ் வீதி தெலுங்கு - வீதி சந்திப்பில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் 44ம் ஆண்டு திருவிழா நடந்து வருகிறது. இதில் பஞ்சமி திதியை முன்னிட்டு வாராகி அம்மன் அலங்காரத்திலும், இன்று சஷ்டிகிதியை முன்னிட்டு புஷ்ப அலங்காரத்திலும் மூலவர் மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.