திருப்பரங்குன்றம் கோயிலில் ஊஞ்சல் உற்ஸவம் துவக்கம்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி ஊஞ்சல் உற்சவம் இன்று சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
திருவிழா நடைபெறும் ஜூலை 2 வரை சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரம் முடிந்து திருவாட்சி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சலில் எழுந்தருளி ஊஞ்சலாட்டம் நடைபெறும். ஓதுவாரால் 30 நிமிடங்கள் திருவாசகம் பாடல்கள் பாடப்படும். பின்பு ஆஸ்தான மண்டபத்தை சுவாமி மூன்று முறை வலம் சென்று சேர்த்தி சென்றடைவார். திருவிழாவில் உச்ச நிகழ்ச்சியாக ஜூலை 3ல் உச்சிக்கால பூஜையில் மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்யகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை, உற்சவர்கள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை முன்பு மா, பலா, வாழை படைக்கப்பட்டு பூஜை நடைபெறும். இரவு சுவாமி தங்கமயில் வாகனத்தில் புறப்பாடாகி ரத வீதிகளில் உலா நிகழ்ச்சி நடைபெறும்.