பிரம்மகுண்டம் முஸ்கந்தா நதியில் அம்மன் கற்சிலை கண்டெடுப்பு
ADDED :842 days ago
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பிரம்மகுண்டம் முஸ்கந்தா நதியில் அம்மன் கற்சிலை கிடைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த பிரம்மா குண்டம் முஸ்கந்தா நதியில் நேற்று மாலை சிறுவர்கள் அம்மன் கல் சிலை இருப்பது கண்டுள்ளனர். சிறுவர்கள் உடனடியாக ஊர் முக்கியஸ்தர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பின் ஊர் முக்கியஸ்தர்கள் சென்று பார்த்தபோது 3 அடி உயரமுள்ள அம்மன் கற்சிலை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் சரவணனிடம் தகவல் தெரிவித்தனர். அதன் பின் வருவாய் ஆய்வாளர் நிறைமதி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சரவணன் சென்று ஆற்றில் கிடைத்த அம்மன் கற் சிலையை மீட்டு சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.