உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலை பேடி ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

திருமலை பேடி ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

திருப்பதி: திருமலை ஸ்ரீவாரி கோயிலுக்கு எதிரே அமைந்துள்ள ஸ்ரீ பேடி ஆஞ்சநேய சுவாமிக்கு, ஞாயிற்றுக்கிழமை காலை சாஸ்திர முறைப்படி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று ஒவ்வொரு ஆண்டும் இக்கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்வது வழக்கம். ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி கோயிலில், மூலவருக்கு பால், தயிர், தேன், சந்தனக் கலவை மற்றும் மஞ்சள் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சுகாதார அதிகாரி டாக்டர் மதுசூதன், மற்ற அதிகாரிகள் மற்றும் கோயில் அர்ச்சகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !