கமுதி பகுதியில் மாசிகளரி; பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
முதுகுளத்தூர்; முதுகுளத்தூர், கமுதி பகுதியில் மாசிகளரி விழாவை முன்னிட்டு பாரிவேட்டை விழா கொண்டாடப்பட்டது.
முதுகுளத்தூர் அருகே ஏனாதி பூங்குளம் கிராமத்தில் உள்ள பூர்ண புஷ்கலா சமேத அய்யனார், கருப்பண்ணசாமி,சேது மாகாளியம்மன், சுடலை மாடசாமி கோயில் மாசிக்களரி விழா முன்னிட்டு கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.பூஜை பெட்டி ஊர்வலமாக தூக்கி வந்தனர்.காப்பு கட்டிய பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பலியிடுதல், மயானபூஜை,உச்சிக்கால பூஜைகள் நடந்தது.பக்தர்கள் ஆடு,கோழி, சேவல் பலியிட்டு மொட்டை அடித்து பொங்கல் வைத்து வழிபட்டனர்.அய்யனார் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை தீபாரதனை நடந்தது. முதுகுளத்தூர் சுற்றியுள்ள பகுதியில் இருந்து பலரும் கலந்து கொண்டனர். கமுதி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் பகவதி பரஞ்சோதி அம்மன் கோயிலில் மாசிகளரி விழா நடந்தது.20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.நேர்த்திக்கடனாக 500க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.விழாவில் கமுதி,முதுகுளத்தூர்,மதுரை,சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் கலந்து கொண்டனர்.