கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: நல்ல மனம் வேண்டும்
ADDED :9 hours ago
வசிக்கும் வீடும், பணியாற்றும் அலுவலகமும் சுத்தமாக இருந்தால் மனதில் உற்சாகம் ஏற்படும். அதுபோல மனம் துாய்மையாக இருந்தால் தான் ஆண்டவர் அதில் குடியிருப்பார். வீட்டையும், அலுவலகத்தையும் தினமும் சுத்தம் செய்யாவிட்டால் துாசி, அழுக்கு படியும். அதுபோல மனதிலும் ஆணவம் என்னும் அழுக்கு, பொறாமை என்னும் துாசி படியாமல் விழிப்பாக இருக்க வேண்டும். மனதை சுத்தமாக்க ஒரே வழி நல்லதையே பார்க்கவும், பேசவும், கேட்கவும் வேண்டும்.நல்ல மனமே ஆண்டவர் குடியிருக்கும் வீடு என்கிறது பைபிள்.