/
கோயில்கள் செய்திகள் / கார்த்திகை ஏகாதசி; காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம்
கார்த்திகை ஏகாதசி; காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம்
ADDED :285 days ago
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் கார்த்திகை மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு இன்று அதிகாலை மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் கால சந்தி பூஜை முடிந்து விஷ்வக்ஷேனர் பூஜை புண்ணியாவசனம் கலச ஆவாகனம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாத உற்சவமூர்த்திகளுக்கு ஸ்தபன திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து ரங்கநாதர் நீல நிற பட்டுஉடுத்தி வெள்ளி சப்பரத்தில் வெண்பட்டு குடை சூழ மேள தாளம் முழங்க திருக்கோவில் வளாகத்தில் வலம் வந்து ஆஸ்தானம் சேர்ந்தார். அதனைத் தொடர்ந்து உச்சகால பூஜை சாற்றுமறை மகாதீப ஆராதனை நடந்தது. இந்த வைபவத்தில் ஸ்தலத்தார்கள் அர்ச்சகர்கள் மிராசு தாரர்கள் திருக்கோவில் செயல் அலுவலர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.