கார்த்திகை ஏகாதசி; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :286 days ago
கோவை; கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசிக்கு ரமா ஏகாதசி என்று பெயர். ஒருவருக்கு மட்டுமின்றி, ஊருக்கே, உலகுக்கே வளமையருளும் நாள் இது. சிறப்பு மிக்க இந்த கார்த்திகை ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம். பூஜை நடந்தது. இதில் உற்சுவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி - பூதேவி சமேதராய் பக்தர்களுக்கு சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் புத்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.