திருவேங்கட பெருமாள் கோவில் மண்டல பூஜை விழா நிறைவு
ADDED :5 hours ago
அன்னூர்; சொக்கம்பாளையம், திருவேங்கடநாத பெருமாள் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. சொக்கம்பாளையம் குப்பு செட்டி தோட்டத்தில் நூறு ஆண்டுகள் பழமையான திருவேங்கடநாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த, 1ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த, 2ம் தேதி முதல் மண்டல பூஜை தினமும் காலை நடைபெற்று வந்தது. மண்டல பூஜை நிறைவு விழா நேற்று நடந்தது. காலையில் திருவேங்கடநாத பெருமாளுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து அலங்கார பூஜை நடந்தது. பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக அருள்பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.