பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :229 days ago
கோவை; மாசி மாதம் சதயம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை,, அபிஷேகம் நடைபெற்றது. இதில் பச்சை வண்ண பட்டு உடுத்தி வெள்ளி காப்பு கவசத்துடனும் சிறப்பு அலங்காரத்தில் அனுமன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.