உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நித்யகல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் யோக நரசிம்மர் கண் விழிக்கும் வைபவம்

நித்யகல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் யோக நரசிம்மர் கண் விழிக்கும் வைபவம்

சின்னசேலம்: சின்னசேலம் நித்யகல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் யோக நரசிம்மர் கண் விழிக்கும் திருநாள் நடந்தது. சின்னசேலம் பெருந்தேவி தயார் சமேத நித்யகல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், ஆதிசேஷ ஆசனத்தில் யோக நிலையில் அருள் பாளிக்கும் யோக நரசிம்மர் கண் விழிக்கும் வைபவம் நடந்தது. அதனையொட்டி நேற்று காலை 8:00 மணிக்கு யோக நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தி, காலை 10:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !