பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் 108 சங்காபிஷேகம்
ADDED :3 days ago
தொண்டாமுத்தூர்: மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு, சித்ரா பவுர்ணமி, மஹா சிவராத்திரி, பங்குனி உத்திர தேர்த்திருவிழா ஆகிய திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படும். கார்த்திகை மாத கடைசி சோமவாரமான நேற்று, 108 சங்காபிஷேகம் நடந்தது. இதற்காக, இலங்கை மற்றும் ராமேஸ்வரத்திலிருந்து, 108 வலம்புரி சங்குகள் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டன. அந்த சங்குகளில் புனித தீர்த்தம் ஊற்றப்பட்டு, சங்காபிஷேக வேள்வி நடந்தது. வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு 108 சங்காபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின், வெள்ளியங்கிரி ஆண்டவர் விபூதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மஹாதீபாராதனையை தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.