ஞான ஈஸ்வரர் கோவிலில் மூலவர் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம்
கோவை ; சதுர்தசி விரதம் என்பது அமாவாசைக்கு முந்தைய நாள் அல்லது பௌர்ணமிக்கு முந்தைய நாள் வரும் முக்கியமான நாள் ஆகும். இந்த நாளில் விரதம் இருப்பவர்களுக்கு தீய சக்திகள் விலகி மனம் மற்றும் உடல் தூய்மை அடையும் என்பது ஐதீகம்..இதை முன்னிட்டு கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் சின்னம்மாள் தெருவில் அமைந்துள்ள ஞான ஈஸ்வரர் கோவிலில் மூலவர் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. இதில் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த மூலவர் சிவபெருமான். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது . அதே போல் கோவை ராம் நகர் பிரசன்ன மகா கணபதி கோவிலில் அமைந்துள்ள மூலவர் விநாயகர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம், பூஜை நடந்தது இதில் வெள்ளி காப்பு கவசத்துடன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த மூலவர் விநாயகர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரின் அருளை பெற்றனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.