அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் வழிபாடு
ADDED :2 days ago
அவிநாசி: அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் அம்மையே அப்பா சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் திருவாசகம் முற்றோதல் வழிபாடு நடைபெற்றது. கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதாக விளங்கும் அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில்,ஸ்ரீ கருணாம்பிகை கலையரங்கத்தில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு அவிநாசி அம்மையே அப்பா சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் 10ம் முறையாக திருவாசகம் முற்றோதல் வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.