உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளிக்கிழமை தரிசனம்: அயோத்தி ராமர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

வெள்ளிக்கிழமை தரிசனம்: அயோத்தி ராமர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

உத்தர பிரதேசம்: அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில், இன்று வெள்ளிக்கிழமை ராம்லல்லாவின் தரிசனம் பெறுவதற்காகப் பெருந்திரளான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.


அயோத்தி ராம ஜென்மபூமியில் ராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது முதல் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி ராமர் கோவில் திறக்கப்பட்டது. இதையடுத்து, நாள்தோறும், ராம் ஜென்மபூமி மந்திரில் சராசரியாக 1 முதல் 1.5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ராமரை தரிசிக்க வேண்டும் என்ற நோக்கில், அயோத்தியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் நின்று பாலராமரை தரிசனம் செய்தனர். 



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !