கோலியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் சிரவண தீபம்: பக்தர்கள் தரிசனம்
ADDED :17 hours ago
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கோலியனுாரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபூமி, நிலா தாயார்கள் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் சிரவண தீப வழிபாடு நடந்தது.
திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு காலை 7:00 மணிக்கு மூலவர் பெருமாளுக்கும், உற்சவர் பெருமாளுக்கும் திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து மூலவர் பெருமாள் தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. உற்சவர் பெருமானுக்கும் அலங்காரம் செய்யப்பட்டு மாலை 5:00 மணிக்கு கோவில் உள் புறப்பாடு நடந்தது. பிறகு உற்சவர் பெருமாள் தாயார்களுடன் 6:00 மணிக்கு கருட கம்பத்தில் எதிரே எழுந்தருளினார். பின், கருட கம்பத்தில் சிரவண தீபம் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.