குண்டு உப்பலவாடி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3 hours ago
கடலுார்: முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கடலுார், குண்டு உப்பலவாடி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த, 9ம் தேதி கணபதி பூஜை, விக்னேஷ்வர பூஜை, சங்கல்பம், பூர்ணாகுதி, வாஸ்து சாந்தி நடந்தது. நேற்று முன்தினம் மாலை விநாயகர் பூஜை, புண்ணியாவாசனம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், முதல் கால யாக சாலை பூஜை, இரவு அஷ்டபந்தனம் மருந்து சாற்றுதல் நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால யாக சாலை பூஜை, நாடிசந்தானம், தத்துவார்ச்சனை, கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, கும்பாபிஷேகம் நடந்தது.