உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடலுார் ராஜகாளியம்மன் கோயில் விழா: அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து வழிபாடு

கூடலுார் ராஜகாளியம்மன் கோயில் விழா: அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து வழிபாடு

கூடலுார்: கூடலுார் பாரதியார் தெருவில் உள்ள ராஜகாளியம்மன் கோயில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது. அதிகாலையில் பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். அம்மனுக்கு பால் அபிஷேகம், சிறப்பு ஆராதனை நடந்தது. மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சிறுவர்கள் பெரியவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாலையில் முளைப்பாரி எடுத்து முக்கிய விதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோயிலை அடைந்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !