திருப்பூர் ஐயப்பன் கோவிலில் 108 வலம்புரிச் சங்காபிஷேகம்
ADDED :851 days ago
திருப்பூர்: திருப்பூர், காலேஜ் ரோடு, ஐயப்பன் கோவில் பிரதிஷ்டா தின விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரதிஷ்டா தினத்தை முன்னிட்டு 108 வலம்புரிச் சங்காபிஷேகம் நடந்தது. விழாவில் சுவாமி ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.