உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் வைத்த பதாகை அகற்றம்

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் வைத்த பதாகை அகற்றம்

சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் சார்பில், உற்சவம் காரணமாக 24, 25,26,27 ஆகிய 4 நாட்கள் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்ற அறிவிப்பு வைக்கப்பட்டது. இதனை அகற்ற இரு தினங்களுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் சென்ற போது தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்ததால் அதிகாரிகள் திரும்பி வந்தனர். ஏற்கனவே கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய கோரி வழக்கு தொடர்ந்த, சிதம்பரம் ராதாகிருஷ்ணன் நேற்று எஸ்.பி.. மற்றும் சிதம்பரம் ஏ.எஸ்.பி.யிடம் அறிவிப்பு பலகையை அகற்ற புகார் அளித்தார். அதனை தொடர்ந்து இன்று அறநிலையத்துறை இணை ஆணையர் சந்திரன். 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் கோவிலுக்குள் சென்று, சட்டையை கழற்றி விட்டு, கனகசபையின் பக்கவாட்டில் வைக்கப்படிருந்த அறிவிப்பு பதாகையை கழட்டி அப்புறப்படுத்தினர். எப்போதும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !