உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு

முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு

சிங்கம்புணரி:  சிங்கம்புணரி அருகே சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித்திருவிழாவின் நான்காம் நாளான நேற்று பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. காலை 10:30 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. 11:00 மணிக்கு கேடகத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி ரதவீதியை வலம் வந்தனர். நாளை இரவு கழுவன் விரட்டுதல் திருவிழா நடக்கிறது. ஜூலை 1ல் தேரோட்டமும், ஜூலை 2ல் தீர்த்தவாரியும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !