ஆனி செவ்வாய்.. உபேந்திர நவமி: சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜை
ADDED :910 days ago
கோவை : கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் கோ -ஆப்ரேட் காலனி, பிரசன்ன மகா கணபதி கோவிலில் ஆனி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை மற்றும் உபேந்திர நவமி திதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனைகள் நடந்தன. புஷ்ப அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.