உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரம்பலூர் ஏகாம்பரேஸ்வரர் கோயில் சுவாமி சிலைகள் உடைப்பு: எஸ்பி விசாரனை

பெரம்பலூர் ஏகாம்பரேஸ்வரர் கோயில் சுவாமி சிலைகள் உடைப்பு: எஸ்பி விசாரனை

பெரம்பலூர்: பெரம்பலூர் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில் மிகவும் பழமையான சிவாலயம் இது. இங்கு 100 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான ராஜகோபுரம் உள்ளது. சுற்று வட்டாரத்தில் 10 மைல் தொலைவிலிருந்து நோக்கும் போதும் இவ்வாலயத்தின் எழில் மிகு ராஜகோபுரம் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. இத்தலத்தில் உள்ள குபேர சிற்பம் மிகவும் அரியதாக கருதப்படுகிறது. குபேர பகவான் தனது வாகனமான மீன் மீது அமர்ந்து காட்சி தருகிறார். இந்த அரிய சிற்பம் கோயிலில் 12 இடங்களில் காணப்படுகிறது. இக்கோயிலில் நேற்று முருகன், பைரவர் மற்றும் கருடாழ்வார் உடைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நேற்று இரவு பூட்டை உடைத்து கோயில் உள்ளே சென்று சுவாமி சிலைகளை உடைத்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிகிறது. இது குறித்து மாவட்ட எஸ்பி நேரில் விசாரனை நடத்தி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !