பெரியகுளம் நடராஜருக்கு ஆனி திருமஞ்சன பூஜை
ADDED :864 days ago
பெரியகுளம்: பெரியகுளம் காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் நடராஜர், சிவகாம சுந்தரி அம்மனுக்கு ஆனி திருமஞ்சன பூஜை கோலாகலமாக நடந்தது. பால், தயிர், பன்னீர்,இளநீர், சந்தனம் உட்பட 12 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்திலும், உற்சவர் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏராளமானோர் பங்கேற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அர்ச்சகர் ஸ்ரீராம் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில், சில்வார்பட்டி முனையடுவ நாயனார் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது.