உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகாசி கருப்பசாமி கோயில் கும்பாபிஷேகம்

சிவகாசி கருப்பசாமி கோயில் கும்பாபிஷேகம்

சிவகாசி: சிவகாசி கருப்பசாமி திருக்கோயில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா நடந்தது. ஜூன் 27 காலை, மாலை, இரவு மங்கள இசை விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசநம், பஞ்ச கவ்யம் தீபாராதனை பிரசாதம் வழங்குதல், முதல் கால யாக பூஜை நிகழ்ச்சி நடந்தது. மறுநாள் விசேஷ சந்தி, பூத சுத்தி, இரண்டாம் கால யாக பூஜை, பிரசாதம் வழங்குதல், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது. காலை சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்வது கும்பம் தருளல் முடிந்த பின்னர் காலை 7:45 மணிக்கு கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !