உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஷாட ஏகாதசி: பாண்டுரங்கன் கோவில் கருவறையில் சுவாமியை தொட்டு பக்தர்கள் தரிசனம்

ஆஷாட ஏகாதசி: பாண்டுரங்கன் கோவில் கருவறையில் சுவாமியை தொட்டு பக்தர்கள் தரிசனம்

திருப்பூர்: ஆஷாட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பூர் ராயபுரம் பாண்டுரங்கன் கோவிலில், கருவறைக்குள் சென்று பக்தர்கள் வழிபட்டனர்.

ஆஷாட ஏகாதசி விழாவை முன்னிட்டு, திருப்பூர் ராயபுரம் பாண்டுரங்கன் கோவிலில் மூலவரின் பாதத்தை தொட்டு தரிசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று நடைபெற்ற மகோற்சவத்தில் பாதுகை சேவை நிகழ்ச்சியில், பண்டரிநாதன் மூலவரின் பாதத்தை தொட்டு, பக்தர்கள் வணங்க அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தொட்டு வணங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !