அழகிய சொக்கநாத பெருமாள் கோயில் மண்டல பூஜை நிறைவு
ADDED :836 days ago
கீரனூர்: பழநி, முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கீரனூர், அழகிய சொக்கநாத பெருமாள் கோயிலில் மண்டல பூஜை நிறைவு வேள்வி நடைபெற்றது. பழநி, முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் கோயில்களில் கீரனூரில் திருமகள், நிலமகள், அழகிய சொக்கநாதர் பெருமாள் திருக்கோயில் உள்ளது. மே.10,ல் முதல் கால வேள்வி பூஜை, நன்மங்கள இசையுடன் துவங்குகியது. மே.11ல் திருமகள், நிலமகள், அழகிய சொக்கநாதர் பெருமாள் சன்னதி கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று (ஜூன் 28) மண்டல பூஜை நிறைவு பெற்று நிறைவு வேள்வி நடைபெற்றது இதில் கோயில் கண்காணிப்பாளர் அழகர்சாமி மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.