புளியரம்பாக்கம் வடாரண்ய ஈஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED :887 days ago
திருவண்ணாமலை : செய்யாறு அடுத்த புளியரம்பாக்கம் வடாரண்ய ஈஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த புளியரம்பாக்கம் வடாரண்ய ஈஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்று வந்தது. விழாவில் நேற்று சிறப்பு பூஜைகள், கால ஹோமம் நடந்தது. தொடர்ந்து, புனித நீர் கலசங்கள் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டு, ராஜகோபரத்திற்கு குருக்கள் புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.